fbpx
Homeபிற செய்திகள்சில்லறை விற்பனை வர்த்தகத்தை டிஜிட்டலில் மேம்படுத்த ‘நியோ துக்கான்’

சில்லறை விற்பனை வர்த்தகத்தை டிஜிட்டலில் மேம்படுத்த ‘நியோ துக்கான்’

சில்லறை வணிகத்தை நவீன மயமாக்கும் முயற் சியின் ஒரு பகுதியாக, முன்னணி டிஜிட் டல் பேமென்ட் சேவை வழங்கும் நிறுவனமான பேநியர் பை, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து, அதன் சில்லறை விற்பனை கூட்டாளர்களின் வர்த்தகத்தை டிஜிட்டல் முறையில் மேம் படுத்துவதற்காக ‘நியோ துக்கான்’ எனும் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

பேநியர் பை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் குமார் பஜாஜ் கூறியதாவது:

வாழ்க்கையில் இடைவிடாமல் சில் லறை கூட்டாளர்கள் வளர உதவும் வகையில், நியோ துக்கான் செயலி பயன்பாட்டை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்திய சில்லறை விற்பனை நமது சமூக பொருளாதார கட்டமைப்பின் தூண்களில் ஒன்றாகும்.

இந்தியா செழித்து வளர, விரைந்து வளரும் பொருளாதாரத்தில் சில்லறை விற்பனையாளர்களுக்கு தேவையான ஆதரவும், அதற்கான கருவிகளும் வழங்கு வது முக்கியம்.

பேநியர் பை நியோ துக்கான் என்பது நிதி உள்ளடக்கம் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் பொருளாதார நல்வாழ்வை செயல்படுத்தும் ஒரு முயற்சி யாகும்.

உள்நாட்டு, தொலை தூர நகரங்களில் கூட டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த உதவும். இது டிஜிட்டல் இந்தியாவை பறைசாற்றும் வகையில் இச் செயலி உள்ளது என்றார்.

சில்லறை விற்பனை யாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகத் தலைவர் மற்றும் திறன்மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய தொழிற் பயிற்சி ஆலோசகர் ஜேம்ஸ் ஏ.ரஃபேல் கூறியதாவது:

இந்த செயலி இந்திய சில்லறை விற்ப னையாளர்களை பொருளாதாரத்தின் முன்னணியில் நிலை நிறுத்தும். டிஜிட் டல் இந்தியா இயக்கத்துக்கு ஒரு பெரிய தூண்டுதலை வழங்குகிறது இச்செயலி. டிஜிட்டல், வர்த்தகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்.


‘வேலை தேடுபவர்களை வேலை உருவாக்குபவர்களாக’ மாற்றி, உள்நாட்டு மற்றும் சிறிய கிராமங்களில் கோடிக்கணக்கான வாழ்வாதார வாய்ப்பை உருவாக்கும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் ஏற்படுத்தும் என்றார்.

பலதரப்பட்ட டிஜிட்டல் கட்டண விருப்பங்கள், கடன் மேலாண்மைக்கான டிஜிட்டல் லெட்ஜர் மற்றும் ஆன்லைன் மொத்த கொள்முதல் விருப்பங்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு உள்ளது ‘நியோ துக்கான்’ செயலி.

படிக்க வேண்டும்

spot_img