fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் உள்ள இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர மேலாண்மை கூட்டுறவு பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற இருக்கிறது.

இச்சேர்க்கைக்கான விண்ணப்பம் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதி 12-ம் வகுப்பு. அதிகபட்ட கல்வித் தகுதி பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச வயது 1.07.21 அன்று 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பயிற்சி காலம் 36 வாரங்கள் ஆகும்.

இப்பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி, கணினி பயிற்சி, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய பயிற்சிகள் கற்றுத் தரப்படும். அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முதல்வர், இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 57, டாக்டர் அழகேசன் சாலை, சாய்பாபா காலனி (அஞ்சல்), கோயம்புத்தூர் 641 011 என்ற முகவரிக்கு பதிவு தபால் அல்லது கூரியர் மூலம் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பம் மீள சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15-09-21 மாலை 5.30 மணிக்குள். விவரங்களுக்கு 0422-2442186, 9442810203 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப்பதிவாளர், முதல்வர் என். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img