fbpx
Homeபிற செய்திகள்மு.க.ஸ்டாலின் அரசின் 100நாள் நலப்பணிகள் தொகுத்து வெளியிடப்பட்ட தமிழக அரசு புத்தக சிறப்பு வெளியீட்டில் முதல்வர்,...

மு.க.ஸ்டாலின் அரசின் 100நாள் நலப்பணிகள் தொகுத்து வெளியிடப்பட்ட தமிழக அரசு புத்தக சிறப்பு வெளியீட்டில் முதல்வர், உயர் அலுவலர்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுப் பொறுப்பேற்று 100 நாட்களில் ஆற்றிய மக்கள் நலப்பணிகளை தொகுத்து, செய்தித்துறையின் சார்பில் தலைநிமிரும் தமிழகம்- நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள் தமிழரசு இதழின் சிறப்பு வெளியீட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமி-ழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தித்துறை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img