fbpx
Homeபிற செய்திகள்8500ல் இருந்து, 38500 மெட்ரிக் டன்களாக தூத்துக்குடி துறைமுக எல்பிஜி சேமிப்பு முனையத்தின் கொள்ளளவு திறன்...

8500ல் இருந்து, 38500 மெட்ரிக் டன்களாக தூத்துக்குடி துறைமுக எல்பிஜி சேமிப்பு முனையத்தின் கொள்ளளவு திறன் அதிகரிப்பு

எஸ்ஹெச்வி எனர்ஜி நிறுவனம், சிங்கப்பூரை அடித்தளமாக கொண்டு இயங்கும் அதன் வர்த்தக செயல்பாட்டுப் பிரிவான S&RM (சப்ளை & ரீசர்ச் மேனேஜ்மெண்ட்) வழியாக இந்தியாவின் தூத்துக்குடி நகரில் அமைந்திருக்கும் அதன் கிரையோஜெனிக் எல்பிஜி (திரவ நிலை பெட்ரோலிய வாயு) சேமிப்பு முனைய கொள்ளளவு வசதியை விரிவுபடுத்தியிருக்கிறது.

இந்த விரிவாக்கம், முதன்மையாக எஸ் ஹெச்வி எனர்ஜியின் இந்திய துணை நிறுவ னமான சூப்பர்கேஸ் மூலம் இந்திய சந்தைக்கு எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்கிறது.

எல்பிஜி சேமிப்பு முனையத்தின் கொள்ளளவு திறன்

தூத்துக்குடி துறைமுகத்தில் அமைந்திருக்கும் இந்த தற்போதைய 8500 மெட்ரிக் டன்னி லிருந்து, 38500 மெட்ரிக் டன்களாக விரிவுபடுத்தப் படுகிறது. இந்திய ரூபா யில் 500 கோடி ரூபாய் முதலீடு இதற்காக செய்யப்படும்.

இந்த முனையத்தின் விரிவாக்க செயல்பாடு, எஸ்ஹெச்வி எனர்ஜி – ன் தலைமை செயலாக்க அதிகாரி பிராம் கிராபெர், சூப்பர் கேஸ் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி சாந்தனு குஹா ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img