fbpx
Homeபிற செய்திகள்7,890 பள்ளி வகுப்பறைகள் கட்டித் தந்த ரவுண்ட் டேபிள் சங்கம்: தேசிய தலைவர் தகவல்

7,890 பள்ளி வகுப்பறைகள் கட்டித் தந்த ரவுண்ட் டேபிள் சங்கம்: தேசிய தலைவர் தகவல்

கோவையில் ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பில் கிளாக் டவர் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திபேந்தர் சிங் வரவேற்று பேசினார்.
விழாவில் ரவுண்ட் டேபிள் தேசிய தலைவர்மனிஷ் லகாடியா மற்றும் ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ரவுண்ட் டேபிள் இந்தியா தேசிய தலைவர் மனிஷ் லகாடியா கூறியதாவது:- ஆண்டுதோறும் நவம்பர் மாதம் ரவுண்ட் டேபிள் இந்தியா தினம் ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது.

கோவையில் கிளாக் டே தின நிகழ்ச்சி


அதையொட்டி கோவையில் கிளாக் டே தின நிகழ்ச்சி வடகோவை யில் உள்ள கிளாக் டவர் பூங்காவில் நடைபெற்றது. இந்த கிளாக்1994 இல் நிறுவப்பட்டது. 2018 புதுப் பிக்கப்பட்டது.இந்தியா முழுவதும் 320 ரவுண்ட் டேபிள் சங்கங்கள் உள்ளன.

கோவை மாவட் டத்தில் மட்டும் எட்டு சங்கங்கள் உள்ளன. இவற்றின் சார்பில் இந்த பிளாக் டவர் நிறுவப்பட்டு நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. எங்களது சங்கம் சார்பில் 7 ஆயிரத்து 890 பள்ளி வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img