75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு கோவை மாவட்டத்திலுள்ள அனை த்து வீடுகளிலும் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகின்றது. இவ் விழாவினை கொண் டாடும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளிலும், நிறுவனங்களிலும் தேசியக் கொடியினை ஏற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் வரும் 13-ம் தேதி முதல் 15 வரை தேசியக்கொடி ஏற்றி சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினைசிறப்பாக கொண்டாடுங்கள்.
தேசியக்கொடியினை வீடுகளில் ஏற்றிய பிறகு, அதனை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். தேசியக் கொடியின் புனிதத் தன்மையை பேணும் வகையில் மற்றும் எந்தவித அலட்சியமும், அவமரியாதையும் இன்றி கையாளுதல் வேண்டும். தேசியக் கொடிகளை திறந்த வெளியிலோ/ குப்பைத்தொட்டியிலோ / வயல்வெளியிலோ எறியக் கூடாது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண் டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார்.



