கோவையை சேர்ந்த பள்ளி மாணவன் 500 ஆங்கில வார்த்தைகளின் எழுத்துக்களை 25 நிமிடங்களில் தலைகீழாக உச் சரித்து சாதனை புரிந்துள் ளார்.
கோவை,செட்டி வீதி அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர், சங்கீதா தம்பதியர்.
இவர்களின் இளையமகன் பிரித் திவ். பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர்,சிறு வயது முதலே ஆங்கிலம், தமிழ் எழுத்துக்களை தலை கீழாக எழுதுவது மற்றும் வாசிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.
மாணவன் ப்ரித்திவின் அரிய திறமையை கண்ட இவரது பெற்றோர், மாணவன் பிரித்திவுக்கு அளித்த பிரத் யேக பயிற்சியால், ஆங்கில வார்த்தைகளை தலைகீ ழாக உச்சரித்து வந்துள்ளார்.
யிust என்ற ஆங்கில சொல்லின் எழுத்துக்களை டி.எஸ்.யு.ஜே எனவும், ஷிளீஹ் என்பதை ஒய்.கே.எஸ். எனவும் உச்சரித்துள்ளார்.
மாணவன் பிரித்தி வின் திறமை குறித்து அறிந்த நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகுவின் முயற்சியால், 500 ஆங்கில வார்த்தைகளின் எழுத்துக் களை 25 நிமிடங்களில் தலைகீழாக கூறி மாணவன் ப்ரித்திவ் நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இவரது சாதனையை கண்கா ணித்த நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின்கலை பண்பாட்டு துறையின் தீர்ப்பாளர் அரவிந்த் மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கிகவுரிவித்தார்.
மாணவன் பிரித்திவ் தனது வலது, இடது என இரு கைகளாலும், தமிழ் எழுத்துக்களை தலை கீழாக வேகமாக எழுதி ஏற்கனவே உலக சாதனை செய்துள்ளவர் என்பது குறிப்பிடதக்கது.



