fbpx
Homeபிற செய்திகள்கோவை ரயில் நிலையம் முற்றுகை - 500 பேர் கைது

கோவை ரயில் நிலையம் முற்றுகை – 500 பேர் கைது

நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற அனைத்து தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் இந்த பாரத் பந்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது. கோவையை பொறுத்தவரை 30 சதவீத கடைகள் அடைக்கப்பட் டுள்ளன.

அனைத்து தொழிற்சங்கங்கள், திமுக கூட்டணி கட்சிகள், எஸ்.எப்.ஐ உள்ளிட்ட அமைப்பினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். சுமார் 500 பேரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் கோவை ரயில் நிலையம் முன்பு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img