தேசிய அளவிலான பாரா சைக்கிளிங் போட்டி ஹைதராபாத்தில் நடை பெற்றது. இந்த போட்டியில் கோவை புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி மாணவர் ஷஷாங்க் சர வணகுமார் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு தேசிய அளவில் இரண் டாம் இடம் பெற்று தமிழகத்திற்க்கு பெருமை சேர்த்துள்ளார். அடுத்து தாய்லாந்துதில் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள் ளார். அந்த மாணவரையும் அவரது பெற்றோரையும் பள்ளியின் ஆண்டு விழாவில் தாளாளர் அருட் பணி அருண் விருது மற்றும் பொன் ஆடை அணிவித்து கௌரவபடுத்தினார். சர்வதேச அளவில் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சுதர்சன் பெல்லி, ஆதித்யா விக்னேஸ் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரி யர்கள், மாணவர்கள், பெற் றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



