fbpx
Homeதலையங்கம்246 ஆண்டு வரலாற்றில் சீக்கியருக்கு கிடைத்த அனுமதி

246 ஆண்டு வரலாற்றில் சீக்கியருக்கு கிடைத்த அனுமதி

அமெரிக்க கடற்படையில் பணியாற் றும் 26 வயது சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்படையில் இந்த சிறப்பு அனுமதியை பெறும் முதல் இந்தியர் ஆவார் அவர்.

அமெரிக்க கடற்படையில் பணிபுரியும் சீக்கியரான சுக்பீர் கடந்த 5 ஆண்டுகளாக காலையில் சீருடை அணிவது வழக்கம். இந்நிலையில் சீக்கியர் என்ற முறையில் தலைப்பாகை அணியும் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அவர் தலைப்பாகையும் அணிந்து கொண்டார்.

அமெரிக்க கடற்படையின் 246 ஆண்டு வரலாற்றில் இதுவரை இதுபோன்ற சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டதில்லை. எனினும் அண்மையில் கேப்டனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டபின் தலைப்பாகை அணிய அனுமதி கிடையாது என்ற நிலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சுக்பீர் முடிவு செய்தார்.

அவருக்கு ஜூன் மாதம் அளிக்கப்பட்ட பதிலில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்படையின் தளபதி அளித்த பதிலில் இவ்வாறு ஒரு தனிநபர் தனது மத அடையாளத்தை வெளிப்படுத்துவதை அனுமதிப்பது கடற்படை ஒழுக்கத்தையும், அர்ப்பணிப்பு உணர்வையும் சீர்குலைத்து விடும் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் சுக்பீர் தலைப்பாகை அணிவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதாவது வழக்கமான பணியிடங்களில் அவர் தலைப்பாகை அணியலாம்.

ஆனால் போர் நடக்கும் ஒரு பகுதியில் பணிபுரியும்போதோ, ராணுவ விழா போன்றவற்றில் பங்கேற்கும் போதோ அவர் தலைப்பாகை அணிய கூடாது. ஆனால் இந்த தடையை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று சுக்பீர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவ, விமான படையில் பணியாற்றும் சுமார் 100 சீக்கியர்கள் முழுமையாக தாடி வைத்தும் தலைப்பாகை அணிந்தும் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img