fbpx
Homeதலையங்கம்20 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

20 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தாய்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 7,305 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியுள்ளது. இது தவிர, புதிதாக 51 கொரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனர்.

இத்துடன் அந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 19,934 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தில் இதுவரை 18,88,536 கொரோனா நோயாளிகள் அந்த நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். 95,804 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1997 பேரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் அளவை விட, தாய்லாந்து நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.

கீழ்த்திசை ஆசிய நாடுகளில் வளம் பொருந்திய ஒரு நாடாக விளங்கும் தாய்லாந்திலேயே கொரோனா கோர தாண்டவமாடுவது துரதிருஷ்டவசமானது தான்.

படிக்க வேண்டும்

spot_img