fbpx
Homeபிற செய்திகள்உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க முடியாது என்ற அச்சத்தை அதிமுகவுக்கு ஏற்படுத்த வேண்டும் - கோவையில் ஆ.ராசா...

உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க முடியாது என்ற அச்சத்தை அதிமுகவுக்கு ஏற்படுத்த வேண்டும் – கோவையில் ஆ.ராசா பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் உளவியல் ரீதியாக அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் எனவும், இந்த உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க முடியாது என்ற உளவியலை அவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா தெரிவித்தார்.

கோவை காளப்பட்டி சுகுணா மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற் குழுக்கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா ஆகி யோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.

கூட்டத்திற்கு பின்னர் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் நகர்புற போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

உள்ளாட்சி தேர்தலுக்காக இன்று துவங்கும் விருப்பமனு வாங்குதல் வரும் 19 ம் தேதி வரை நடைபெறும். யார் வேண்டுமானாலும் விருப்பமனு தாக்கல் செய்யலாம். அதே வேளையில் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும்.

தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிர் வரிசையில் நின்று பிரச்சினை ஏற்படுத்தினால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நம்மை பார்த்து எதிரிகள் பயப்பட வேண்டும். எதிரிகள் என்ன செய்கின்றனர் என்பதை பார்த்து முணுமுணுப்பது சரியாக இருக்காது. கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி ,நகராட்சி, பேரூராட்சிகளின் 275 வார்டுகளிலும் வெற்றி பெற வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் 2298 வாக்கு சாவடிகள் இருக்கின்றது, ஒரு வாக்கு சாவடிக்கு பூத் கமிட்டி அமைத்து 12 பேர் வீதம் கட்டாயம் பணியாற்ற வேண்டும். 4 நாட்களில் பூத் கமிட்டி உருவாக்கிட வேண்டும்.

மேலும் வரும் 22ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவையில் நல திட்ட நிகழ்வுகள் வழங்க வருகின்றார் எனவும், ஒரு லட்சம் பேர் திரண்டு முதல்வரை வரவேற்க வேண்டும். நம்ம தான் ஆளுங்கட்சி, நம்முடைய முதல்வர் ஸ்டாலின், நம்மை கண்டுதான் எதிரிகள் பயப் படணும், அவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், நாம் இரண்டு அடி எடுத்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதாவது: இந்தியாவில் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கின்றார். இந்த முறை மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்ப டுத்தும் வல்லமை ஸ்டாலினுக்கு இருக் கின்றது.

உளவியல் ரீதியாக அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும். இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவால் ஜெயிக்க முடியாது என்ற உளவியலை அதிமுகவினருக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img