fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் ரூ.2.94 லட்சம் பணம் பறிமுதல்

மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் ரூ.2.94 லட்சம் பணம் பறிமுதல்

தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள் ளது. இதனை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச்.16 ஆம் தேதி அறிவித் தது. தொடர்ந்து அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் சட்டமன்றத்தொகுதி வாரியாக பறக்கும் படை, நிலக்கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் – தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 630 ரொக்கப்பணமும், அதேபோல் தாயனூர் கணபதி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே ரூ.54,000 ரொக்கப்பணமும், வையாளிபாளையம் – தெம்மனூர் சாலையில் ரூ.1.20 லட்சம் ரொக்கப்பணமும் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2,94,630 பணத்தை மேட்டு ப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரனிடம் பறக்கும் படை அதிகாரிகள் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img