Homeபிற செய்திகள்கோவை மண்டல அலுவலகம், நரசிபுரம் கிளையூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில்நிதி உட்சேர்க்கை விழிப்புணர்வு முகாம்

கோவை மண்டல அலுவலகம், நரசிபுரம் கிளையூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில்நிதி உட்சேர்க்கை விழிப்புணர்வு முகாம்

கோவை மாவட்டம் தொண்டாமுத் தூர் அடுத்துள்ள நரசிபுரம் யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளை மற்றும் வங்கியின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் நிதி உட்சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


தேவராயபுரம் ஊராட்சி, பரமேஸ்வரபாளையம் கொங்கு திருப்பதி கோவில் அருகே உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கோவை மண்டலத் தலைவரும், துணைப் பொது மேலாளருமான எஸ்.எஸ். லாவண்யா, இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநரும், தலைமைப் பொது மேலாளருமான யராசி ஜெயக்குமார், ரிசர்வ் வங்கி பொது மேலாளர் எம். ராஜ்குமார், உதவிப் பொது மேலாளர் பேரரசு நிருதன், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மும்பை மத்திய அலுவலகப் பொது மேலாளர் விகாஸ் பாபு சிட்டிப்ரோலு, கோவை மண்டல உத்தரவாதத் தலைவர் சி.பிரபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


மேலும், கோவை மாவட்ட மகளிர் திட்ட உதவித் திட்ட அலுவலர் சுதா, கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி.கார்த்திகேயன், நபார்டு வங்கியின் கோவை மாவட்ட வளர்ச்சி மேலாளர் மஹ்மூத் ஹுசைன் ஆகியோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் வங்கித் திட்டங்கள் மற்றும் நிதிச் சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.


இம்முகாமில் பயனாளிகளுக்கு சுமார் ரூ.4.10 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் அனுமதி ஆணைகளும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்குக் கடன் அனுமதி ஆணைகளும், நிதி உட் சேர்க்கை திட்டப் பதிவுச் சான்றிதழ் களும் வழங்கப்பட்டன.


மேலும், நிதி விழிப்புணர்வு குறித்து யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மண்டல அலுவலகப் பணியாளர்கள் மற்றும் கோவை கலைமகள் கல்வி நிறுவன மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
இம்முகாமில் தேவராயபுரம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.


மேலும், கோவை கலைமகள் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள யூனியன் வங்கியின் யுவா லான்ஜை, இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குனரும் தலைமை பொது மேலாளருமான யராசி ஜெயக்குமார் பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img