டோஷிபா ஜான்சன் எலிவேட்டர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (TJEI), இந்தியாவின் மிகவேகமாக வளர்ச்சி யடையும் எலிவேட்டர் மற்றும் எஸ்க லேட்டர் நிறுவனமாகும்.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தனியார் ரியல் எஸ்டேட் முதலாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்களை கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றான ஆர்எம்இசட் RMZ) கார்ப் நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று பிரதான திட்டங்களுக்குத் தேவையான 168 எலிவேட்டர்களை வழங்க வேண்டிய மிகப்பெரிய ஆர்டர் கிடைத்துள்ளது.
பெங்களூருவில் உள்ள ‘RMZ ஈக்கோவேர்ல்டு 30’ திட்டத்திற்கு 70 எலிவேட்டர்களும், ஹைதராபாத்தில் உள்ள நெக்ஸிட்டி திட்டத்திற்கு 63 மற் றும் RMZ ஸ்பையர் திட்டத்திற்கு 35 எலிவேட்டர்கள் என மொத்தம் 168 எலிவேட்டர்களை நிர்மாணித்தல், பராமரித்தல் மற்றும் இயக்குதல் ஆகிய பொறுப்புகளை TJEI ஏற்கவுள்ளது.
டோக்கியோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான மிட்சுயி ஃபுடோசான் (Mitsui Fudosan) கம்பெனி லிமிடெட்டின் சார்பு நிறுவனமான மிட்சுயி ஃபுடோசான் (ஏசியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து RMZ கார்ப் முதலில் துவங்கியது ‘RMZ ஈக்கோவேர்ல்டு 30’ திட்டமாகும்.
இந்த புதிய கூட்டணி குறித்து TJEI நிறுவனத்தின் மேலான் இயக்குனர் கட்சு ஹிகோ சாட்டோ கூறியதாவது: கட்டிடங்களுக்கு இடையே பயணிக்கும் மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து அனுபவத்தினை வழங்கத் தேவையான தீர்வுகளை உருவாக்கி அளிப்பதே எங்கள் நிறுவனத்தின் பிரதான நோக்கமாகும்.
அதற்கு அவசியமான ஈ.எஸ்.ஜி. (சுற்றுப் புறம், சமூகம் மற்றும் நிர்வாகம்) மேலாண்மை முன்னெடுப்புகளை நாங்கள் மேற்கொள்வது போல, எங்கள் கூட்டணியில் இணையவுள்ள நிறுவனங்களும் அதே கொள்கைகளை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்துவரும் நகர சூழலில் மக்கள் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு பாதுகாப்பாக, வசதியாக மற்றும் விரைவாக பயணிக்க வேண்டும் என்பதே எங்களது தொழிலின் பிரதான கொள்கையாகும் என்றார்.
TJEI நிறுவனம், இந்தியாவின் 17 முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.



