fbpx
Homeபிற செய்திகள்சிறு, நடுத்தர தொழில் பணி மேற்கொள்ள வொர்க்ஸ்பேஸ் வழங்குகிறது வி நிறுவனம்

சிறு, நடுத்தர தொழில் பணி மேற்கொள்ள வொர்க்ஸ்பேஸ் வழங்குகிறது வி நிறுவனம்

வோடஃபோன் ஐடியா லிட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வி பிஸினெஸ் நிறுவனம், கூகுள் கிளவுட் இந்தியா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தொடக்க நிலை தொழில்களுக்கான (ஸ்டார்ட்-அப்ஸ்) வணிக தீர்வுகளை வழங்க உள்ளது.

வணிக நோக்கங்கள் மற்றும் பணியாளர்களின் பணியிடம் மற்றும் சூழல் அடிப்படையிலான சௌகரியம் ஆகியவற்றுக்கு இடையேயான சரியான சமநிலையை உருவாக்க கூகுள் மீட், ஜிமெயில், டிரைவ், ஷீட்ஸ், ஸ்லைட்ஸ், டாக்ஸ் மற்றும் காலண்டர் போன்ற பயனுள்ள செயலிகளை வி பிஸினெஸ் ப்ளஸ் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் வொர்க் ஸ்பேஸ் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்கும்.

இந்த கூட்டுச் செயல்பாடு, சிறு வணிகங்கள் மற்றும் அவற்றின் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இடையிலான பணியிடம் மற்றும் சூழல் தொடர்பான சௌகரியம் மற்றும் பணிகளைப் பாதுகாப்பாகவும் திறம்படவும் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாதாந்திர வாடகை கட்டணமாக ரூ.399-ல் தொடங்குகிறது.
இந்த கூட்டுச் செயல்பாடு மற்றும் சலுகைகள் குறித்து, வோடஃபோன் ஐடியா லிட் நிறுவனத்தின் தலைமை நிறுவன வணிக அதிகாரி, அபிஜித் கிஷோர் கூறியதாவது:

கூகுள் வொர்க்ஸ்பேசின் கூகுள் கிளவுட் உடன் நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த கூட்டுச் செயல்பாடு, ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள வகையில் தொலைதூர பணியிட சூழல்களை திறமையாகவும் பாதுகாப்பாகவும் அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தொடக்க நிலை தொழில்கள் ஆகியவற்றுக்கு இந்த வசதிகள் மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றார்.

கூகுள் கிளவுட் இந்தியாவின், பார்ட்னர்ஸ் அண்டு அலையன்சஸ் பிரிவின் தலைவர் அமிதாப் ஜாகோப் கூறியதாவது:

தொலைதூர வேலை சூழல்களில் கூட அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் உற்பத்தி மற்றும் பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில் கூகுள் வொர்க்ஸ்பேஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தை இந்த சந்தைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img