fbpx
Homeபிற செய்திகள்சிம்போலோ விட்ரிபைட் டைல்ஸ் ஷோரூம் வேலூரில் திறப்பு

சிம்போலோ விட்ரிபைட் டைல்ஸ் ஷோரூம் வேலூரில் திறப்பு

இந்திய செராமிக் துறையில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமாக திகழும் சிம்போலோ விட்ரிபைட் நிறுவனத்தின் புதிய ஷோரூம் வேலூரில் திறக் கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் வெளிப்புற தளங்களுக்கு தேவையான கச்சிதமான டைல்ஸ்கள் மற்றும் 16க்கு 20 தடிமன் கொண்ட வெளிப்புற டைல்ஸ்கள், சமையலறை மேடை, டபுள் சார்ஜ் செய்யப் பட்ட விட்ரிபைட் டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான டைல்ஸ்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

முதல் பிரத்யேக டைல்ஸ் மற்றும் சானிட்டரிவேர் ஷோரூமை கைலாஷ் செராமிக்ஸ் உடன் இணைந்து வேலூரில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆரப்பாக்கத்தில் திறந்துள்ளது.

ஷோரூமில் இந்நிறு வனத்தின் சிறந்த டைல்ஸ்களான 1200×2400 டிரை கிரானுலா மற்றும் 1200×1800 ஆடம்பரமான மேற்பரப்பு டைல்ஸ்கள் மற்றும் உட்புற வடிவமைப்பிற்கான 16எம்எம் தடிமன் கொண்ட ராக்டெக்வகை டைல்ஸ்கள் மற்றும் வெளிப்புறம், சமையல் அறை மேடைக்கான டைல்ஸ்கள், டபுள் சார்ஜ் மற்றும் மெருகூட்டப்பட்ட விட்ரிபைட் டைல்ஸ், சுவர்களுக்கான டைல்ஸ் கள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

புதிய ஷோரூம் திறப்பு குறித்து இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குனர் ஜிக்னேஷ் கக்காரியா கூறியதாவது: ஷோரூமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாதிரி வடிவமைப்புகள் டைல்ஸ் ஷாப்பிங்கிற்கான வெவ்வேறு வகையான மாறுபட்ட அனுபவத்தை வழங்கும்.

எங்களின் வருகையால் சில பிரீமியம் பிராண்டுகள் எங்களுடன் போட்டியி டுவதற்காக அவர்களின் வணிக செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்யும் என்றார்.

தமிழகத்திற்கான பிராந்திய மேலாளர் ஸ்ரீராம் கூறுகையில், வேலூர் அதன் சிறந்த சுவை மற்றும் அழகியல் உணர்வுக்கு பெயர் பெற்றதாகும். வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பிரத்யேகமான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.

ஒவ்வொருவரும் வீட்டை அழகுபடுத்த வேண்டும் என்று வரும் போது சிறந்த ஒன்றையே விரும்புகிறார்கள் என்றார்.

இந்தியாவில் செராமிக் டைல்ஸ்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக சிம்போலோ நிறுவனம் உள்ளது. இதன் தொழிற்சாலைகள் 6 மாநிலங்களில் உள்ளன.

படிக்க வேண்டும்

spot_img