மருத்துவ பராமரிப்பு தரத்தில் இந்தியாவின் முன்னணி மாநாடான CAHOCON 2026-ன் 10-வது மாநாடு வரும் ஏப்ரல் 10 முதல் 12 வரை சென்னையில் நடைபெறுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு (CAHO) நடத்தும் இந்நிகழ்வில், நோ யாளிகளின் பாதுகாப்பு, மருத்துவ தரம், அங்கீகாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்து விவாதிக்க, 200-க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,500 மருத்துவத் துறை தலைவர்கள், மருத்துவர்கள், நிர்வாகிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டோடு சேர்ந்து, முன்னணி மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள், டிஜிட்டல் சுகாதார நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் நவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்தும் சுமார் 150 அரங்குகளைக் கொண்ட ஒரு மாபெரும் சுகாதார கண்காட்சியும் நடைபெறும்.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிகிபிளி-வின் தலைவர் டாக்டர் விஜய் அகர்வால் பேசுகையில், “கடந்த பத்தாண்டுகளில், இந்தியா முழுவதும் சுகாதாரத் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை வலுப் படுத்தும் ஒரு ஆற்றல் மிக்க தேசிய இயக்கமாக சிகிபிளி வளர்ந்திருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பொதுச் செயலாளர் டாக்டர் லல்லு ஜோசப், அமைப்புக் குழுவின் இணை தலைவர் மணிவண்ணன்,அமைப்புக் குழு தலைவர்டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, அமைப்பு இணைத் தலைவர் டாக்டர் குருசங்கர் உள்ளிட்டோர் பேசினர்.



