ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்கத்தின் சார்பாக புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு எளிய முகமதிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் விழா சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவர் டி.என். சுப்பிரமணியம் நிர்வாகிகள் எம். சாதிக் பாட்சா, எஸ்.கார்த்திக், எஸ்.கே.எஸ். சுரேஷ் , ஏ.சரவணன் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல், நிர்வாகிகள் உதயம் பொ.செல்வம், அ.லாரன்ஸ் ரமேஷ், ஏ.எம்.சாதிக் பாட்சா கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சுமார் ஒரு இலட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.



