வாடிக்கையாளர்கள் பண்டிகை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் உலகளாவிய புதுமை மிக்க ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனம் தனது எக்ஸ்70 மாடல், வி21 மாடல், ஒய்73, ஒய்33 எஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
இதன் எக்ஸ்மாடல் ஸ்மார்ட்போன்கள் பிரீமியம் இமே ஜிங் தொழில் நுட்பத் திற்கான சிறந்த ஸ்மார்ட்போன்களாக உள்ளன. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த விவோ எக்ஸ் 70 மாடல் உள்ளமைக்கப்பட்ட அல்ட்ரா- சென்சிங் கிம்பல் மற்றும் விவோவின் புரொபஷனல் இமேஜிங்சிப்வி1 உடன் வெளி வந்திருக்கிறது.
தீபாவளி பண்டிகையை யொட்டி இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான சலுகைகளை விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறப்பு சலுகைகள் இந்தியா முழுவதும் உள்ள ஆப்லைன் ஸ்டோர்களில் நவம்பர் 7-ம் தேதி வரை கிடைக்கிறது.
எக்ஸ் மற்றும் வி மாடல் போன்களுக்கு சிட்டி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், கோடக் மகிந்திரா, ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்டிபி பைனான்ஸ் மூலம் எக்ஸ்70 மாடல் ஸ்மார்ட் போனை வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் கேஷ் பேக் சலுகை, எக்ஸ்70 மாடல், வி21 5ஜி (8ஜி பிரேம்+128 ஜிபி மெமரி கார்டு), வி21 5ஜி (8 ஜிபிரேம் +256ஜிபிமெமரிகார்டு), வி21இ 5ஜி (8 ஜிபிரேம் +128 ஜிபிமெமரிகார்டு) ஸ்மார்ட் போன்களுக்கு ஒருமுறை ஸ்கிரீன் மாற்றிக் கொள்ளும்வசதி, ரூ.101 செலுத்தி பஜாஜ் பைனான்ஸ் மூலம் விவோவின் 15 ஆயிரத்திற்கு மேல் உள்ள ஸ்மார்ட் போன்களை வாங்கலாம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
வி மற்றும் ஒய் மாடல்களுக்கு வி 21 இ 5ஜி(8ஜிபி +128ஜிபி மெமரி கார்டு) மற்றும் ஒய் 73 ஸ்மார்ட் போன் களுக்கு ஒருமுறை, ஸ்கிரீன் மாற்றிக் கொள்ளும்வசதி, ரூ.101 செலுத்தி பஜாஜ் பைனான்ஸ் மூலம் விவோவின் 15 ஆயிரத்திற்கு மேல் உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.



