fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 10 நாள் சிறப்பு கைத்தறி பயிற்சி தொடக்கம்: வீட்டிலிருந்தே வருமானம் பெற வாய்ப்பு

கோவையில் 10 நாள் சிறப்பு கைத்தறி பயிற்சி தொடக்கம்: வீட்டிலிருந்தே வருமானம் பெற வாய்ப்பு

கோவை இராமநாதபுரத்தில் இயங்கி வரும் சில்க் வில்லேஜ் கைத்தறி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 10 நாள் சிறப்பு கைத்தறி பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது.


பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் தேசிய நெசவாளர்கள் பயிற்சி தலைவர் காரப்பன், சில்க் வில்லேஜ் நிறுவனர் மற்றும் சிஇஓ முருகேசன், பேஷன் ஆர்ட் நிறுவன தலைவர் சுகுணா சண்முகம், மற்றும் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் தேன்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயிற்சியை துவக்கி வைத்தனர்.

பயிற்சியின் முக்கிய அம்சமாக, பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு கைத்தறி நெசவின் நேரடி அனுபவம் மாணவர்களிடம் பகிரப்பட்டது. மேலும், தேசிய விருது பெற்ற கைத்தறி டிசைனர் தர்மராஜ் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, டிஜிட்டல் வடிவில் நவீன கைத்தறி டிசைன்கள் உருவாக்கும் முறைகளைப் பயிற்சி மூலம் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.


இந்த நிகழ்வில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் கைத்தறி நெசவின் ஆழமான புரிதலையும், ஒரு பாரம்பரிய கலைகற்றலின் ஆனந்த அனுபவத்தையும் பெற்றதாக தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img