கோவை அம்ருதா பொறியியல் பள்ளியின் இயந்திர பொறியியல் துறையைச் சேர்ந்த இரண்டு இளங்கலை மாணவர் களுக்கு, “ரிவரண்ட்” என்ற நதிகளை தூய்மை செய்யும் ரோபோ திட்டத்திற்காக ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் ஏப்ரல் 8-ஆம் தேதி டெல்லியில் உள்ள இந்தியா ஹாபிடேட் மையத்தில் நடைபெற்ற ThingQbator Cohort 7 நிகழ்வில் வழங்கப்பட்டது.
ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்ற மூன்றாம் ஆண்டு பிடெக் மாணவர்களான எம் பானி நிதின் மற்றும் ஷரவன் ஏபி, நீர்நிலைகளில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கையாள்வதற்கான ஒரு தீர்வாக “ரிவரண்ட்” என்னும் ரோபோவை உரு வாக்கியுள்ளார்.
மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது, இது நீர்வழி தூய் மைக்கு நிலையான அணுகு முறையை வழங்குகிறது.
நாடு முழுவதும் உள்ள மாணவர் குழுக்களால் சமூக ரீதியாக பொருத்தமான கண்டுபிடிப்புகளை ஆதரிக்கும் NASSCOM அறக்கட்டளை மற்றும் CISCO ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்படும் ThingQbator திட்டத்தின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த விருதை நாஸ்காம் அறக் கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோதி சர்மா மற்றும் சிஸ்கோ இந்தியா & சார்க் நிர்வாக இயக்குநர் ஹரிஷ் கிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
இயந்திர பொறியியல் துறையின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் கே.ரமேஷ் குமார் இச்சாதனை குறித்து கூறுகையில், தொழில் நுட்ப அறிவை நடை முறைப்படுத்துவதில் பல்கலைக்கழகம் பிரதிபலிப்பே இந்த அங்கீகாரம் என்றார்.
“எங்கள் மாணவர்கள் நிஜ உலக பிரச்சனைகளுக்கான தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த அங்கீகாரம் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்கான அவர்களின் உறு திப்பாட்டை எடுத்துக்காட் டுகிறது” என்று அவர் கூறினார்.
இந்தியா முழுவதும் உள்ள நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்கிய குழுவில் “ரிவரண்ட்” சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.



