fbpx
Homeபிற செய்திகள்வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு 10 மணியளவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. கடும் புகை மூட்டம் எழுந்ததால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, துணை தீயணைப்பு அலுவலர் அழகர் சாமி தலைமையில் பீளமேடு, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களிலிருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனமும், 25 தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்றனர்.

ஆனால், குறித்த நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யாத காரணத்தால் தீயை அணைப்பதில் தொய்வு ஏற்பட்டதாக தெரிகிறது.

புகை மூட்டத்தால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள்.

படிக்க வேண்டும்

spot_img