வேலூர் ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சி யில் ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் நலத்திட்டங்களை வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு வெங்கடா புரம் ஊராட்சி மன்றத் தலைவர் பாபு தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்வேல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு ராஜன்பாபு ஊரக வாழ்வாதார திட்டத்தின் ஆலோசகர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல் அசோலா வளர்ப்பு கோழிகள் வளர்ப்பு போன்ற திட்டங்களுக்கு மகளிருக்கு கடன் வழங்கப்பட்டது.
ஊராட்சி துணைத்தலைவர் பார்த்திபன் மகளிர் குழு மேலாளர் இந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக மகளிர் திட்ட உதவி அலுவலர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.



