டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM), ‘தி ஹைலக்ஸை’ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. ஹைலக்ஸ் என்ற பெயர் ‘ஹை’ மற்றும் ‘லக்ஸரி’ என்பதிலிருந்து பெறப்பட்டது.
இது பல ஆண்டுகளாக உலகின் அனைத்து நிலப்பரப்புகளில் தீவிர ‘கடினத்தன்மை’ மற்றும் ‘கரடுமுரடான தன்மைக்கு’ அறியப்படுகிறது.
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் (டிஎம்சி) தலைமை பொறியாளர் யோஷிகி கோனிஷி, டொயோட்டா பிராந்திய தலைமை பொறியாளர் ஜுராசார்ட் ஜோங்குசுக், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) நிர்வாக இயக்குநர் மசகாசு யோஷிமுரா, விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையின் டிகேஎம் நிர்வாக துணைத் தலைவர் தடாஷி அசுமா மற்றும் ஸ்ட்ராட்டஜிக் வணிகப் பிரிவின் பொது மேலாளர் வைஸ்லைன் சிகாமணி முன்னிலையில் ஹைலக்ஸ் அறிமுகப்படுத்த ப்பட்டது.
டொயோட்டாவின் பிராந்திய தலைமைப் பொறியாளர் யூரோசார்ட் யங்சுக் கூறுகையில், சிறப்பு வாய்ந்த பயண அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற விருப்பத்தை கருத்தில் கொண்டு, ஹைலக்ஸ், மிகவும் வலுவான மற்றும் வெல்ல முடியாத உறுதியான கட்டுமஸ்தான ஐஎம்வி வம்சாவளியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது. இது ‘எங்கும் செல்லும்’ ‘எதுவும் செய்யக்கூடிய’ வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
டிகேஎம் நிர்வாக இயக்குநர் மசகாசு யோஷிமுரா கூறியதாவது: தனித்துவமான ஆன் மற்றும் ஆஃப் சாலை திறன்களைப் பெறவும், வேலை அல்லது ஓய்வு தொடர்பான தினசரி நகர்ப்புற இயக்கத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்திடவும் இது ஒரு சிறந்த தேர்வாக உள்ளது என்றார்.
டிகேஎம்-ன் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையின் நிர்வாக துணைத் தலைவர் தடாஷி அசாஸுமா கூறுகையில், ஹைலக்ஸ் சந்தைப் பங்கு ‘தனித்துவமான கடினத்தன்மை மற்றும் அதிநவீனத்தில்’ அதன் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஹைலக்ஸ் மக்களின் உத்வேகத்தைப் பெறுகிறது. இது எல்லாவற்றிலும் சிறந்ததை வழங்குகிறது என்றார்.
டொயோட்டா ஹைலக்ஸ்க்கான முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2022-ல் டெலிவரி தொடங்கும்.
எக்ஸ்- ஷோரூம் விலைகள் மார்ச் 2022-ல் அறிவிக்கப்படும். வாடிக்கையாளர்கள் காரை ஆன்லைனில் (www.toyotabharat.com) அல்லது அருகிலுள்ள டொயோட்டா டீலரிடம் பதிவு செய்யலாம்.



