உலகளாவிய புதுமை யான ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ, ‘வீட்டிற்கு வரும் மகிழ்ச்சி’ என்னும் புதிய விளம்பர வீடியோவை, இந்தியா முழுவதும் இதன் ஆப்லைன் ஸ்டோர்களிலும் டிஜிட்டல் தளத்திலும் வெளியிட்டுள்ளது.
இந்த விளம்பர வீடியோவை டென்சு ஏஜிஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் வயதான அப்பாவாக நடிகர் கன்வால்ஜித் சிங் நடித்துள்ளார்.
குடும்பத்தை வெளிநாட்டில் குடி அமர்த்திவிட்டு, பெரிய வீட்டில் தனது பராமரிப்பாளருடன் வசிக்கும் கன்வால்ஜித் சிங் உடன் விளம்பரப் படம் துவங்குகிறது.
இந்நிலையில், தீபாவளி நெருங்கும் வேளையில் ஓர் இளைஞன் தூய்மையான இடத்தில் சில நாட்கள் தங்கி இருக்க முடிவெடுத்து வருகிறான். பண்டிகை நாட்களில் குடும்பம் தன்னுடன் இல்லாதது குறித்து வருந்துவதை பார்த்த அவன், அவருடன் அவன் இருக்கும் புகைப்படத்தையும், தனது பிள்ளைகளின் படத்தையும் கையில் வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுகிறான்.
அதைப் பார்த்த அவரது பிள்ளைகள் தீபாவளியை தந்தையுடன் கொண்டாட விரும்பி வருகின்றனர். விளம்பர வீடியோ குறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் நிபுன் மரியா கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் நிலையில், இந்த சோதனையான காலகட்டத்தில் வரும் தீபாவளி பண்டிகை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
‘வீட்டிற்கு வரும் மகிழ்ச்சி’ இந்த விளம்பரத்தின் மூலம், குடும்பங்களுக்கு இடையே உள்ள உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான இடைவெளிகளைக் குறைத்து, ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
விளம்பரப்படம் குறித்து டென்சு இம்பாக்ட் நிறுவனத்தின் தேசிய படைப்பு இயக்குனர் அனுபமா ராமசுவாமி கூறுகையில், வயதான பெற்றோர்களுக்கும் அவர்களின் வளர்ந்த குழந்தைகளுக்கும் இடையிலான தூரம் வேகமாக அதிகரித்து வரும் உலகில், நாம் வாழ்கிறோம் என்பதை இந்த விளம்பரப் படம் நமக்கு தெரிவிக்கிறது என்றார்.



