fbpx
Homeபிற செய்திகள்வி நிறுவனத்தின் ‘ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ திட்டம் அறிமுகம்

வி நிறுவனத்தின் ‘ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ திட்டம் அறிமுகம்

நோய்த்தொற்றுக்குப் பிறகான வர்த்தகத் தாக்கத்தினால், அதிகப்படியான பணப்புழக்கத்தாலும் கட்டட மாற்றங்களாலும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டன.

இந்த சவால்களை மனதில் கொண்டு,
உலக எம்எஸ்எம்இ தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான வி, தனது வி பிசினஸ் மூலம் எம்எஸ்எம்இக்கள் தங்களது திறன் வளர்ச்சியை வேகமாகப் பெற உதவும் வகையில் ‘ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ எனும் ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக மாறியுள்ளது டிஜிட்டல்மயப்படுத்தல். அதே நேரத்தில், தொலைதூரப் பகுதிகளில் இருந்தவாறே பணியாற்றும் இக்காலத்தில் டிஜிட்டல் முறையில் வர்த்தகத்திற்கு பாதுகாப்பு வழங்குவதும் கடினம்.

இதை உத்தேசித்து, எம்எஸ்எம்இக்களின் டிஜிட்டல் பயணம் முழுவதிலும் உதவும் நோக்கோடு ‘ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ திட்டத்தினை கட்டமைத்துள்ளது வி பிசினஸ்.
இம்முயற்சி குறித்து வி நிறுவனத்தின் தலைமை நிறுவன வர்த்தக அலுவலர் அரவிந்த் நெவாடியா பேசுகையில்,

“இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் எம்எஸ்எம்இக்கள், ஜிடிபியில் 30 சதம் பங்களிக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவை அமைப்பதிலும் புதிய ஐடியாக்களை வளர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றும் சிறு வர்த்தக நிறுவனங்களை அங்கீகரிப்பதில் பெருமைப்படுகிறோம்.

எம்எஸ்எம்இக்களின் எதிர்காலத்தைச் சிறந்ததாகக் கட்டமைப்பதிலும், அடுத்த கட்டத்தை அடைவதற்கான நீண்ட காலத் தீர்வுகளை வழங்குவதிலும் எங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ’ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ அமையும்.

அவர்களது முடிவெடுக்கும் செயல்பாட்டை எளிமைப்படுத்துவதையும், அவர்களது வர்த்தகம் எதிர்காலத்தில் சிறப்பாக அமையப் பெறுவதற்கான சரியான கவனம், செல்லும் திசை மற்றும் தீர்வுகளை அடையாளப்படுத்த உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்த திட்டத்தின் மூலமாக 2,50,000 எம்எஸ்எம்இக்கள் அதிவேக வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

வி பிசினஸ்இன் ரெடி ஃபார் நெக்ஸ்ட் திட்டம் இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது: டிஜிட்டல் சுய மதிப்பீடு மற்றும் பிரத்யேக எம்எஸ்எம்இ சலுகைகள்.

படிக்க வேண்டும்

spot_img