வாடிக்கையாளர்கள் சத்தம் மற்றும் இசையை மிகத் துல்லியமாக கேட்கும் வகையில் புதுமையான உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ நிறுவனம் ‘விவோ வயர்லெஸ் ஸ்போர்ட் லைட்’ என்னும் கழுத்து பட்டையை (நெக் பேண்ட்) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வயர்லெஸ் ஸ்போர்ட் லைட் தரமான ஆடியோவை வழங்குவதோடு, சிறப்புமிக்க அம்சங்களுடன் பயனர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குகிறது.
1999 ரூபாய் விலையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஷோரூம்கள் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் உள்ளிட்ட ஆன்லைன் இணையதளங்களிலும் கருப்பு, நீலம் ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கின்றன.
ஆடியோ அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், பணிச்சூழலியலுக்கு ஏற்ப வடிவமைக் கப்பட்டுள்ள இந்த நெக்பேண்ட் மிகக் குறைந்த எடையை கொண்டுள்ளது.
சிறந்த ஒலி அனுபவத்தை வழங்கும் வகையில் 11.2 எம்எம் திறன்மிக்க ஒலி வெளிப்பாட்டுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் பயன்படுத்தும் வகையில் வெளிவந்திருக்கிறது.
விவோவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிடபிள்யூஎஸ் நியோ இயர்போன்ஸ் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது புதிய தயாரிப்பான ‘வயர்லெஸ் ஸ்போர்ட் லைன் நெக்பேண்ட்’யை அறிமுகம் செய்து இருக்கிறோம்.
தனித்துவமிக்க துல்லியமான ஒலி மற்றும் அதிவேகமான ஆடியோ அனுபவத்தின் ஒருங்கிணைப்பை வழங்குவதன் மூலம் அன்றாட இசை ஆர்வலர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும் என்றார்.
நெக்பேண்டில் டைகோகு அலுமினியம்-வெண்கலப் பூச்சு கொண்ட காயல் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிக அதிர்வெண்களை இனப்பெருக்கம் செய்யும் சக்திவாய்ந்த ஒலி அமைப்பு முறையாகும்.
இந்த நெக் பேண்ட் 80 மில்லி செகண்ட் வரையிலான குறைந்த தாமத விகிதத்துடன் வருகிறது, இதன் காரணமாக பயனர்கள் தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை பெற முடியும்.
விவோவின் புகழ்பெற்ற கோல்டன் இயர்ஸ் ஒலியியல் ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த நெக்பேண்ட்டில் சமீபத்திய புளூடூத் பதிப்பான வி5.0 பொருத்தப்பட்டுள்ளது.



