fbpx
Homeபிற செய்திகள்விவோ ‘ஒய்75 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ ‘ஒய்75 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

உலகளாவிய புதுமைமிக்க பிராண் டாக திகழும் விவோ நிறுவனம், தனது ஒய் மாடல் வரிசையில் 5ஜி தொழில்நுட்பத்தில் ,புதிய ‘ஒய்75 5ஜி’ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 16.71செ.மீ. புல்எச்டி+ இன்-செல் டிஸ்பிளேயை கொண்டுள்ளது. டிஸ்பிளே பிரகாச மானவண்ணங்களுடன் தெளிவான விவ ரங்களை வழங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையில் இதில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டு, மெலிதாக அழகான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

விவோவின் ஒய் மாடல் ஸ்மார்ட் போன்களுக்கான விளம்பர தூதர் நடிகை சாரா அலிகான், நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனை வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இது 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜருடன் வெளிவந்திருக்கிறது. இதில் 7என்எம் 5ஜிசிப் மற்றும் 2.2 ஜிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட ஆக்டாகோர் 1 புராசசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 128ஜிபி மெமரிகார்டு மற்றும் பன்டச் ஓஎஸ் 12 இயங்குதளத்துடன் புதிய டிஜிட்டல் அனுபவத்தை வழங்குகிறது.

பயனர்களுக்கு நாள் முழுவதும் சிறந்த கேமிங் மற்றும் புகைப்படங்கள் எடுப் பதற்கான ஸ்மார்ட்போன் ஆகும். புதிய ஒய்75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்து இந்நிறுவனத்தின் பிராண்ட் ஆலோசனைப்பிரிவு இயக்கு னர் யோகேந்திர ஸ்ரீராமுலா கூறியதாவது:

விவோ ஒய்75 5ஜி மாடல் அழகான மற்றும் பிரீமியம் தோற்றம், 5ஜி இணைப்பு, 5000 எம்ஏஎச் பேட்டரி, 8ஜிபி ரேம், 4ஜிபி ரேம் நீட்டிக்கும் வசதி, 50எம்பி கேமரா என அனைத்து பிரிவிலும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான ஸ்மார்ட் போன் களை பயனர்களுக்கு வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார். ரூ.21990-ல் இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-ஸ்டோர், ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

பின்புற பேனல் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லைட் பிளாக், க்ளோவிங் கேலக்சி ஆகிய 2 வண்ணத்தில் கிடைக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img