நடப்பாண்டில் கடந்த ஆறு மாதங்களாக ஏப் ரல் முதல் செப்டம்பர் வரை கட்டுமானப் பொருட்களின் அளவில்லாத விலை உயர்வு ஏற்பட்டதால், கட்டுமான கட்டணமும் உயர்ந்துள்ளது.
சிமென்ட் விலை கடந்த ஆண்டு மார்ச்சில் ரூ.280 – 300 -ல் இருந்து, ரூ.480 – 520 ஆக உள் ளது. ஸ்டீல் விலை டன் ஒன்றுக்கு 42,000 ரூபாயிலிருந்து 76,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஹார்ட்வேர், சானிட்டரி, எலக்ட்ரிக், பிவிசி போன்றவற்றின் விலையும் 30 – 50 சதம் உயர்ந்துள்ளது. எரிபொ ருள் விலை உயர்வால் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது.
இது குறித்து கிரெடாய் கோவை கிளையின் தலைவர் குகன் இளங்கோ கூறியதாவது:
பொருட்களின் விலை உயர்வால், கட்டுமானத் தின் விலையும் சதுர அடிக்கு ரூ.300 முதல் 400 வரை உயர்ந்துள்ளது. கட்டுமான தொழில் செய்வோர், ரியல் எஸ் டேட் மேம்படுத்து வோருக்கு இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களில் பலர் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினருக்கு ஏற்ற குறைந்த விலையில் உள்ள வீடுகளை கட்டி தருகிறார்கள், நீண்ட கால மாக கோவிட் பாதிப்பால் முடங்கிக் கிடந்த கட்டிட தொழில், தலைதூக்கும் இந்த சமயத்தில் விலை உயர்வு, மீண்டும் சரிவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
கிரெடாய் செயலாளர் ராஜிவ் ராமசாமி கூறியதாவது: ஜிஎஸ்டி வரியை கட்டுமான நிறுவனங்கள் திரும்பப் பெற முடியாது (No Input Credit) என்பதால், ரியல் எஸ்டேட் துறைக்கு இது வரிமேல் வரியாக மாறியுள்ளது.
கட்டுமானத் தொழிலில் ஜிஎஸ்டி வரியாக மட்டும் சதுரடிக்கு 220 முதல் 250 ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது.
செலுத்திய வரியை திரும்பப் பெறும் வசதியை மீண்டும் அளித்து, ரியல் எஸ்டேட் தொழிலை காப்பதோடு, அனைவருக்கும் குறைந்த விலையில் வீடு என்ற இலக்கை அடைய உதவ வேண்டும் என மத்திய, மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
மூலப்பொருட்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.



