fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் மாவட்டத்தில் 5,93,700 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

விருதுநகர் மாவட்டத்தில் 5,93,700 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியா பட்டி, இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், திருச்சுழி, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, விருதுநகர் ஆகிய வட்டத்தில் 5,92,697 அரிசி வகை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1003 குடும்பங்கள் என மொத்தம் 5,93,700 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டன. மொத்தம் 988 நியாயவிலைக் கடைகள் மூலம் இப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு நடந்தன.

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன். பசியினால் இளைத்தே
வீடுதோறும் இரந்தும் பசியாறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்”

  • என்ற வள்ளலாரின் வரிகளுக்கிணங்க ஏழைகளின் துயர்கண்டு அவர்களின் பசிப்பிணியை போக்கும் வண்ணமும், பொங்கல் திருநாளை சிறப்பாக ஏழைகளும் கொண்டாட வழிவகை செய்தவர் முதலமைச்சர் என்றால் அது மிகையன்று.
  • உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத் தொழிலை போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றுகின்ற நன்னாளாகவும். சாதி, மத, பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் -தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
  • இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும், மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழு கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1296.88 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
  • விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை வட்டத்தில் 75,810 குடும்ப அட்டைதாரர்களும், காரியாபட்டி வட்டத்தில் 32,425 குடும்ப அட்டைதாரர்களும், இராஜபாளையம் வட்டத்தில் 100,146 குடும்ப அட்டைதாரர்களும், சாத்தூர் வட்டத்தில் 41,679 குடும்ப அட்டைதாரர்களும், சிவகாசி வட்டத்தில் 1,14,231 குடும்ப அட்டைதாரர்களும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 52,532 குடும்ப அட்டைதாரர்களும், திருச்சுழி வட்டத்தில் 34,500 குடும்ப அட்டைதாரர்களும், வத்திராயிருப்பு வட்டத்தில் 37,991 குடும்ப அட்டைதாரர்களும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 35,927 குடும்ப அட்டைதாரர்களும், விருதுநகர் வட்டத்தில் 67,456 குடும்ப அட்டைதாரர்களும் என 5,92,697 அரிசி வகை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1003 குடும்பங்கள் என மொத்தம் 5,93,700 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
  • இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு 725 முழு நேர நியாயவிலைக் கடைகள், 263 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 988 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு நடந்தன.
  • பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க அனுப்பி வைக்கப்பட்டன.
    இச்சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கவும், கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற ஏதுவாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை விநியோகத்திட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டன.
  • அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெற்றனர்.
  • ‘எங்களையும் கொண்டாட வைத்தார் முதல்வர்’
    அருப்புக்கோட்டை வட்டம், வெள்ளக்கோட்டையை சேர்ந்த வாழவந்தாள் தெரிவித்ததாவது:
  • தை திருநாளை எங்களை போன்ற ஏழை, எளிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் மற்றும் முழு கரும்பு ஆகிய 21 சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி, எங்களையும் சிறப்பாக கொண்டாட வைத்த முதல்வருக்கு எனது குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • ‘தரமான பொருட்கள்’
    விருதுநகர் வட்டம், பாண்டியன் நகரை சேர்ந்த பிச்சை தெரிவிக்கையில், எங்கள் குடும்பத்தில் 3 நபர்கள் உள்ளோம். முதல்வர் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளார்.
  • அனைத்து பொருட்களும், கரும்பும் மிக தரமானதாக உள்ளது. முதல்வருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
  • தொகுப்பு:
    செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
    விருதுநகர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img