சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோ னா தடுப்பூசி மூன்றாவது தவணை செலுத்தும் பணி நேற்று நடந்தது.
சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கூறியதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசின் வழிகாட்டு தலின்படி சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, காவல்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு 9 மாதங்கள், அல்லது 273 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று வரை 1,606 முன்கள பணியாளர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள் அனைவரும் குறிப் பாக சுகாதாரத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச் சித்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொது மக்களிடம் தொடர்பில் உள்ள அரசுத்துறை அலுவல ர்கள் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.
பொதுமக்களும் தவறாமல் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத் துக் கொள்ள தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண் டும். இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கூறினார்.
இந்த ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், துணை ஆட்சியர் (பயிற்சி) அபிநயா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா, மருத்துவர்கள் அபிநயா, வீணா மற்றும் சுகாதார துறை, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந் தனர்.



