fbpx
Homeபிற செய்திகள்வாடிக்கையாளர் அனுபவ தளம் - டாடா டெலி பிசினஸ் சர்வீசஸ் அறிமுகம்

வாடிக்கையாளர் அனுபவ தளம் – டாடா டெலி பிசினஸ் சர்வீசஸ் அறிமுகம்

இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தங்களின் கூட்டு நிறுவனங்களுக்கு முழுமையான டிஜிட்டல் இணைப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான தீர்வுகள் வழங்குவதில் முன்னணி நிறு வனமாக திகழும் டாடா டெலிபிசினஸ் சர்வீசஸ் நிறு வனம், தனது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான டிஜிட்டல் அனு பவத்தை வழங்க ‘வாடிக்கையாளர் அனுபவ தளம்’ என்னும் புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ஒரு புதுமையான தளம் ஆகும். இது தயாரிப்புகளுக்கான மெய்நிகர் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கு ஏற்ப அவர்களுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது.

வாடிக்கையாளர்கள் டாடா டெலி பிசினஸ் சர்வீசின் முக்கிய தயாரிப்புகளை சிறப்பாக அனுபவிப்பதற்கும் விரைவான மற்றும் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கும் ‘வாடிக்கையாளர் அனுபவ தளம்’ ஒரு சிறந்த டிஜிட்டல் வழிகாட்டியாக செயல்படும்.

இந்த தளத்தில் உள்ள தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் மெய்யாக அனுப விக்கும் விதமாக பாதுகாப்பான உள்நு ழைவு சான்றுகள் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் டாடா டெலி பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் காளிதாஸ் கூறுகையில், இன்றைய உலகில், பொருட்கள் வாங்குவதற்கு முந்தைய வாடிக்கையாளர்களின் மனநிலை அனுபவமானது தொழில்நுட்ப பொருட்களை எப்படி வாங்குகிறார்கள் என்பதை மாற்றியமைக்கிறது.

வாடிக் கையாளர்கள் ஒரு பொருளை வாங்கினால் எப்படி நன்றாக இருக்கும் என்று பார்த்து உணர அனுமதிப்பதை விட சக்தி வாய்ந்தது எதுவும் இல்லை. இதை எங்களின் வாடிக்கையாளர் அனுபவ தளம் செய்கிறது.

இந்த இயங்குதளம் முற்றிலும் பாதுகாப்பானதாகும். ஏனெனில் இந்த தளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளரின் சான்றுகள் ரகசியமாக வைக்கப்படும்.
இந்த தளத்தில் உள்நுழைவதற்கு ஓடிபி கட்டாயம் ஆகும்.

இதன் காரணமாக சரியான தரப்பினர் மட்டுமே இந்த சேவைகளை பெற முடியும் என்பதை இது உறுதி செய்கிறது. வாடிக்கையாளர் அனுபவ தளம் எங்கள் உள் செயல்பாடுகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும்.

ஏனெனில் இது எங்கள் தீர்வு நிபுணர்களுக்கு வாடிக்கையாளர்களின் தரவை சிறப்பாக பகுப்பாய்வு செய்து அவர்களுக்கு தனிப் பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்க உதவும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img