fbpx
Homeதலையங்கம்வழி பிறந்தது

வழி பிறந்தது

வெளிநாட்டு பயணிகள் விரைவிலேயே வழக்கம் போல இந்தியாவுக்கு சுற்றுலா வரலாம் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு சுற்றுலா துறைக்கு மட்டுமல்லாமல் விமான போக்குவரத்து துறைக்கும் ஹோட்டல் துறைக்கும் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது.

மாநில அரசுகளும் சுற்றுலாவுடன் தொடர்புடைய துறையினரும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தத்தின் காரணமாக அறிவிப்பு வெளிவந்திருக்கிறதே தவிர, அது குறித்த அடுத்தகட்ட நகர்வை மத்திய அரசு ஏனோ தவிர்த்து வருகிறது. அதனால் சில குழப்பங்களும், ஏமாற்றங்களும் நிலவி வருகிறது.

உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு முழுமையான அனுமதி வழங்கியிருக்கும் அதே நேரத்தில் விமான நிறுவனங்கள் கடந்த ஒன்றரை ஆண்டு இழப்பை ஈடுகட்ட பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதை தடுக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img