சோலார் மின் உற்பத்திக்கு ரூ.19,500 கோடி நிதி உதவி அளித் ததற்கு கொசிமா வரவேற்றுள் ளது. சிறு, குறு தொழில்களுக்கு எந்த விதத்திலும் ஏற்றம் இல்லை என்றும் கொசிமா தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கொசிமா தலைவர் பி.நல்லதம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அவசர கால கடன் திட்டத்தை 2023 வரை நீட்டிப்பு செய்ததை வரவேற்கிறோம்.
மூன்று ஆண்டு களில் ரயில்வேயில் 400 புதிய ரயில்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படுவதையும், சோலார் மின் உற்பத்திக்கு ரூ.19,500 கோடி நிதி உதவி அளித்ததையும், ராணுவ தளவாட உற்பத்தியில் 68 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்ய அளிப்பதையும் வரவேற்கிறோம்.
தனி நபர் வருமான வரி விதிப்பு வரம்பு உயர்த்தப் படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஜிஎஸ்டி ஜாப் ஒர்க் 5% ஆக குறைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்காதது ஏமாற்றமளிக்கிறது.
சிறு குறு தொழில்களுக்கு மூலதன கடன் மானியம் அதிகரிக் காததும் ஏமாற்றம் தருகிறது. இந்த நிதி நிலை அறிக்கை சிறு, குறு தொழில்களுக்கு எந்தவிதத்திலும் ஏற்றம் தருவதாக இல்லை என்பது எங்கள் கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



