fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில், தொழில்நுட்ப பூங்காவினை எந்த பகுதியில் அமைக்கலாம் என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்.

கூடிய விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு தொழில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பயோனியர் பாரடைஸ் கூட்டரங்கில், எழு மின் (RISE) அமைப்பின் சார்பில் இளையோர், தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர் ள் மற்றும் திறனாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, எழுமின் அமைப்பின் தலைவர் தமிழ்பணி ம.ஜெகத் கஸ்பார் தலைமையில் நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தொழில் முனை வோர்களிடையே பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்ட தொழில் முனைவோர்கள் மற்றும் திறனாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தி ரைஸ் எனர்ஜி (THE RISE ENERGE) அமைப்பின் குமரி கிளை, நாஞ்சில், தென்குமரி, மூன்று கடல், கோட்டார், நாளை நமதே, குமரி சிலம்பம் மற்றும் பண்டைய கலைகளின் சங்கம், எழுமின் குமரி சர்வதேச தலைமையினை திறந்து வைப்பதிலும், எழுமின் அமைப்பு வாயிலாக உலக தமிழ் தொழில் முனைவோர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியினை மேற்கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் பணிகள் தொய்வுற்ற நிலையில் தற்போது அதனை சீர்படுத்தி உலகளவில் முன்னெடுத்து செல்லும் பணியினை மேற்கொண்டு வருகிறோம்.

அதன் ஒருபகுதியாக ஏழு இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் கொண்ட குழு வினை அமைத்து அரசிற்கு ஆலோசனைகள் வழங்கி நல்ல திட்டங்களை கொண்டு வருவது, பன்னாட்டு மற்றும் உள்ளூர் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

முன்னோட்டமாக காகிதமில்லா சட்டமன்ற கூட்டத்தொடரினை (Paperless Assembly) நடத்தினோம். இது ஒரு மகத்தான சாதனையாக மட்டுமல்லாமல், பெருமை அளிக்கிறது. தகவல் தொழில்நுட் பத்துறையை பொறுத்தவரையில் தற்போது மிகவும் சவாலான தருணமாகும்.

தமிழ் வளர்ச்சி அகாடமி நிச்சயமாக எழுமின் மூலமாக தமிழர் சங்கத்தை ஒருங் கிணைப்போம். தொழில்நுட்ப பூங்காவினை நமது மாவட்டத்தில் எந்த பகுதியில் அமைக்கலாம் என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். கூடிய விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு தொழில் பூங்கா அமைப்பதற்கான நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலீட்டாளர்களுக்கு வரவேற்பு
தமிழ்நாட்டிற்கு குறிப்பாக நமது கன்னியாகுமரி மாவட் டத்திற்கு முதலீட்டாளர் கள் வருவதை வரவேற்கிறோம்.

முதலீட்டாளர்கள் தொழில் துவங்குவதற்கான அனைத்து வசதி களையும் ஏற்படுத்திக் கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக, குமரி மாவட்டம் படிப்பறிவிலும், எழுத்தறிவிலும் முதல் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.

இதனால் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திட நடவடிக்கை மேற் கொள்ளப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தை முழு நெகிளி இல்லா மாவட்டமாக மாற்றிடும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதோடு, மாவட்டத்தின் வணிக நிறுவனங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், சிறு குறு கடைகள் உட்பட அனைத்து தரப்பினர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எழுமின் அமைப்பின் (THE RISE ENERGE) சார்பில் வருகிற மே மாதம் 5, 6,7 ஆகிய தினங் களில் லண்டன் மாநகரில் நடைபெறவுள்ள தொழில் முனை வோர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார்.

முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ் ராஜன், எழு மின் அமைப்பு தலைவர் (கன்னியாகுமரி) ஜோஸ் மைக்கில் ராபின், ஸ்டாலின் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் ஜோசப் ஸ்டாலின், எழுமின் அமைப்பு பொருளாளர் சுரேஷ் உட்பட தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img