முதலமைச்சர் ஸ்டாலின் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அண்ணா நகர் மண்டலம் வார்டு எண் 94ல் பாபா நகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை களையும் வகையிலும் அருகில் உள்ள பூம்புகார் நகர், ஜானகிராம் காலனி, எஸ்.ஆர்.பி.நகர், சீனிவாசா நகர் செந்தில் நகர் உமா மகேஷ்வரி நகர், செல்விநகர், அஞ்சுகம் நகர், சரோஜினி நகர், ஐயப்பா நகர், கே.கே.ஆர்.கார்டன், பழனியப்பா நகர் ஆகிய இடங்களில் தேங்கும் மழைநீரை அகற்றும் பணிக்காக 33 கி.மீ நீளத்திற்கு கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



