கோவை அருகே ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சிப்பதாக 2 பெண்கள் மீது போலீஸ் எஸ்.பி. செல்வநாகரத்தினத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை அருகே உள்ள மதுக்கரை ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர், ஜெகன். இவர் கோவை தி.மு.க. கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு செல்வநாகரத்தினத்திடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை மயில்சாமி, அம்மா ராஜா மணி ஆகியோர் விபத்தில் காலமாகிவிட்டனர்.. எனது தாய்வழி சொத்து 16 ஏக்கர் பூமி சூலூர் தாலுகா அப்பநாயக்கன்பட்டிபுதூர் பகுதியில் உள்ளது.
இதன் மதிப்பு சுமார் ரூ 6 கோடியாகும். இந்த பூமியை எனது உறவுமுறை பெண்கள் இருவர் போலி தஸ்தாவேஜு மூலம் அபகரிக்க முயற்சி செய்துவருவதோடு மிரட்டியும் வருகின்றனர்.
எனவே தாங்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். மேற்கண்டவாறு புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.



