fbpx
Homeபிற செய்திகள்ரூ.10 கோடி வரை எளிதாக கடன் பெற்று பெண்கள் சுயதொழில் மூலம் முன்னேறலாம் யூனியன் வங்கி...

ரூ.10 கோடி வரை எளிதாக கடன் பெற்று பெண்கள் சுயதொழில் மூலம் முன்னேறலாம் யூனியன் வங்கி துணைப் பொது மேலாளர் ரஞ்சித் சுவாமிநாதன் அழைப்பு

பெண்கள் சுயதொழிலில் முன் னேற ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடி வரை யூனியன் வங்கியில் எளிதாக கடன் பெற முடியும் என்று வங்கியின் துணைப் பொது மேலாளர் ரஞ்சித் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.கோவை கணபதி பகுதியில் உள்ள யூனியன் வங்கி கிளையில், அகில இந்திய சிறு குறு, நடுத்தர கடன் தொடர்பு முகாம் (6ம் தேதி) நடைபெற்றது.

இதில் தொழில் முனைவோர்கள் கடன் பெறுவது எப்படி என்பது குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.கோவை கணபதி பகுதியில் உள்ள யூனியன் வங்கி கிளையில், அகில இந்திய சிறு, குறு, தொழில் முனைவோர்கள், தொழிலை மேம்ப டுத்த விரும்புவோர், தொழில் துவங்க நினைப்பவர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்த முகாமில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சியில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் பிராந்திய தலைவர் மற்றும் துணை பொது மேலாளர் ரஞ்சித் சுவாமி நாதன் பேசியதாவது: பெண் தொழில் முனைவோர் களை ஊக்கப்படுத்தும் வகையில், யூனியன் நாரிசக்தி, எனும் திட்டம் இயங்கி வருகிறது. பெண்களின் முன் னேற்றம், நாட்டின் முன்னேற்றம் என்ற அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ், பெண்கள் சுய தொழிலில் முன்னேறவும் தொழிலை மேம்படுத்தவும் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடி வரை கடன் வழங்க படுகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.

இதனையடுத்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எம்எஸ்எம்இ உதவி பொது மேலாளர் டிகே அபிஜித் பேசினார். அவர் கூறியதாவது:கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர் களை ஊக்கப்படுத்த இந்த 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தொழில் முன்னேற்றம், தொழில் விருத்திக்காக, யூனியன் எம்எஸ்எம்இ சுவிதா எனும் திட்டம் உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்கள் தங்களது காலி இடங்களை வங்கிகளில் காட்டினால் மட்டும் போதும் வங்கி, உங்களது நிறுவனத்தின் கட்டுமான பணிகள் முதல், உங்களது நிறுவனத்திற்கு தேவையான அனைத்து இயந்திரங் களையும் வாங்கித் தந்து, நிறுவ னத்தை இயக்க அனைத்து நடை முறைகளையும் பூர்த்தி செய்து உங்களிடம் வழங்கும். இது போன்ற பல்வேறு திட்டங்கள் சிறு குறு வர்த்தகங்களுக்கு வங்கியில் கடன் வசதி திட்டங்கள் உள்ளன. ஆனால் யாரும் அதனை முறையாக பெறு வது இல்லை.

இதுபோன்ற வங்கித் திட்டங் களை சிறு குறு நிறுவனங்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற திட்டங்களை நன்கு கேட்டறிந்த சிறுகுறு வர்த்தக நிறுவனங்களின் கடன் தொகைக்கான காசோலைகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே அவர் களுக்கு வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறு குறு வர்த்தக நிறு வனங்களைச் சார்ந்தவர்களுக்கு யூனியன் வங்கியின் பல்வேறு திட்டங்களை முதன்மை மேளாளர் சுரேஷ் அனைவருக்கும் தெளிவாக எடுத்துரைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img