fbpx
Homeபிற செய்திகள்மொபைல் நெட்வொர்க் கனெக்டிவிட்டி இன்றி பாலிசி தகவலை அணுக புதிய வசதி

மொபைல் நெட்வொர்க் கனெக்டிவிட்டி இன்றி பாலிசி தகவலை அணுக புதிய வசதி

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் ஆனது 1 மில்லியன் பதிவிறக்கங்கள் என்ற முக்கியமான மைல்கல்லை கடந்து சாதனைப்படைத்துள்ளது.

இந்த வெற்றியானது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாலிசிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வசதியை குறிக்கிறது. அதோடு, அப்ளிகேஷனில் கிடைக்கும் புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அம்சங் களுக்கு இது ஒரு சான்றாகும்.

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி மணீஷ் துபே கூறும்போது, “கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தலானது டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அமைப்பாக இயங்க விரும்பு கிறோம். வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டின் அளவை அதிகரிக்கவும், அவர்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம்.

புதுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆப் ஆனது, வாடிக் கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எப்போதும் இயங்கும் என்பதில் உறுதியாக இருக் கிறோம்” என்றார்.

மில்லியனில் கால டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்தி புதுமைகளை உருவாக்கவும் வாடிக்கை யாளர்களை மேம்படுத்தவும் எப்போதும் முயற்சி செய்து வருகிறோம். புதுமையான மொபைல் செய லியானது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாலிசிகளை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பான தகவல்களை அணுகும் முறையை வழங்குகிறது. அதோடு, மொபைல் ஆப்ஸ் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 4 சேவை கோரிக்கைகளில் 1-ஐ ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர்களால் மேற்கொள்ள முடியும் என்பது சிறப்பம்சம். எந்த நேரத்திலும் எங்கும் சேவை வழங்கும் வசதியைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு ப்ளேஸ்டோர் மற்றும் வீளிஷி ஆப் ஸ்டோர் இரண் டிலும் இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையில் சிறந்த ரேட்டிங் பெற்றுள்ள அப்ளிகேஷனாக மதிப்பிடப் பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.

படிக்க வேண்டும்

spot_img