மீஞ்சூர் ஒன்றியம் பெரும்பேடு ஊராட்சியில் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கிராம சபைகூட்டம் ஊராட்சித் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஊரகம் மற்றும் பிறதுறை, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு திட்டம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.
துணைத் தலைவர் தாமோதரன், ஊராட்சி செயலாளர் முத்து பற்றாளர் அமிர்தவல்லி கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



