உலகிலேயே அதிக காசநோயாளிகளை கொண்ட நம் நாட்டில் ஆண்டுக்கு 7 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
காசநோயாளிகளிடமிருந்து வெளிப்படும் டி.பி. பேக்ஸிலி என்ற வைரஸ் நோயாளிகள் பொது இடங்களில் தும்மும்போது வெளிப்படுகிறது. அதை சுவாசிக்கும் மற்றவர்களுக்கும் அந்த கிருமி எளிதில் தொற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
முகக்கவசம் அணிந்து கொண்டு வெளியே வருபவர்கள் இந்த கிருமி தாக்குதலிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள முடியும்.
பணி இடங்களில் வெளிப்படும் நச்சுப்புகை, கார்பன், சிலிக்கா புகை மூலம் நுரையீரல் தொற்று சட்டென பற்றிக் கொள்ளும். தொடர்ந்து முகக்கவசம் அணியும் போது தொற்றுகளிலிருந்து ஓரளவுக்காவது தப்பித்துக் கொள்ள முடியும்.
எனவே கொரோனா இந்த உலகைவிட்டு நிரந்தரமாக போய்விட்டாலும் தொடர்ந்து மாஸ்க் அணிவதன் மூலம் மேற்கூறிய தீமைகளிலிருந்து நம் சுவாசப் பாதையை காப் பாற்ற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
நல்ல விஷயம் தானே? உடை அணிவதை போல மாஸ்க் அணிவதையும் நம் இயல்பாக்குவோம். சுவாசப் பாதையை தூய்மையாக வைத்துக் கொள்வோம்.



