fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகளின் பன்முக திறமைகளை ஊக்குவிக்கும் விழா- கோவை கலெக்டர் சமீரன் பரிசு வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளின் பன்முக திறமைகளை ஊக்குவிக்கும் விழா- கோவை கலெக்டர் சமீரன் பரிசு வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நித்திலயம் அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகளின் பன்முக திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக மாநில அளவிலான விளையாட்டு, மற்றும் கலை நிகழ்ச்சிகள் போட்டி கோவை எஸ். என்.ஆர்.அரங்கில் நடைபெற்றது.

மாநில அளவில் நடைபெற்ற இதில், சென்னை, கோவை, மதுரை,திருச்சி என தமிழகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டனர்.

நித்திலயம் அறக்கட் டளை மற்றும் ரோட் டரி கோயமுத்தூர் கேலக்ஸி ஆகியோர் இணைந்து நடத்திய இதில், அறக்கட்டளையின் நிறுவன தலைவர் காயத்ரி சம்பத் மற்றும் சம் பத் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கோவை மாவட்ட ஆட் சியர் சமீரன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் கௌரவ அழைப்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேலு, பின்னணி பாடகர்கள் வினோத் வேணுகோபால் ரேஷ்மி ஆகியோர் கலந்து கொண் டனர்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் கேலக்ஸி நிர்வாகிகள் ரகு கண்ணப்பன் குணசேகரன் சுதீர் நித்திலம் டிரஸ்ட் நிர்வாகிகள் ராஜேந்திரன் காளிச்சாமி, கருணாநிதி தீபா சுப்ரமணியன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்-.

படிக்க வேண்டும்

spot_img