fbpx
Homeதலையங்கம்மக்கள் உடல் நலனில் முதல்வரின் அக்கறை!

மக்கள் உடல் நலனில் முதல்வரின் அக்கறை!

மக்கள் பணிகள், கட்சிப் பணிகள் மற்றும் அலுவல் பணிகள் என பம்பரமாக சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்தனைக்கும் நடுவில் தமது உடல் நலத்திலும் தீவிர கவனம் எடுத்துக் கொள்கிறார்.

சைக்கிள் பயணம், உடற்பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வருவதோடு ஜிம்மிலும் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது இந்த செயல்பாடுகள் பொதுமக்களை உடற்பயிற்சி செய்யத் தூண்டுகிறது. நடைப் பயிற்சி, சைக்கிள் பயணத்தின்போது மக்களை சந்தித்து உரையாடி அவர்களை உடற்பயிற்சி மேற்கொள்ள உற்சாகம் ஊட்டுகிறார்.

நேற்று கூட அவர் ஜிம்மில் ‘ஒர்க் அவுட்’ செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

உடற்பயிற்சி செய்யுங்கள், நடைபயிற்சியில் ஈடுபடுங்கள், உடல் நலத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், நேரம் கிடைக்கும்போது யோகா செய்யுங்கள் என முதல்வர் அடிக்கடி சொல்லி வருகிறார். சொல்வதோடு மட்டுமின்றி தினமும் அவற்றை செய்தும் வருகிறார்.

தூங்குவதற்கு கூட போதிய நேரமின்றி உழைத்துக்கொண்டிருக்கும் முதல்வர், சமூக நலனோடு மக்களின் உடல் நலத்திலும் அக்கறை காட்டி வருவது பாராட்டத்தக்கது.

மேலும் நமது டிஜிபி சைலேந்திரபாபு அடிக்கடி நீண்ட தூரம் சைக்கிள் பயணம் செய்து உடல் நலத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என அறிவுறுத்துவதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

எனவே நாம் ஆணாக & பெண்ணாக, எந்த வயதினராக இருந்தாலும் அதற்கேற்ப, இருக்கும் வசதிகளைக்கொண்டு முடிந்த உடற்பயிற்சிகளை செய்ய உறுதி ஏற்போம். குறைந்தபட்சம் தினமும் நடைப்பயிற்சியாவது மேற்கொள்வோம்.

கொரோனா வரக்கூடாது; ஒருவேளை வந்துவிட்டால் அதனை தாங்கும் எதிர்ப்பு சக்தி உடலுக்கு வேண்டுமல்லவா? உடற்பயிற்சி செய்வோம், ஆரோக்கியம் பெறுவோம்!

படிக்க வேண்டும்

spot_img