fbpx
Homeபிற செய்திகள்பைக் பந்தயத்தில் சீறிப்பாயும் 7 வயது சிறுவன்

பைக் பந்தயத்தில் சீறிப்பாயும் 7 வயது சிறுவன்

கோவை போத் தனூரை சேர்ந் தவர் கேசவன். இவரது மகன் வோல்டோ. 7 வயதான இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறு வயது முதலே பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட வோல்டோ தனது 5 வயதில் தந்தை கேசவன் மற்றும் பயிற்சியாளர் ஆனந்த் உதவியுடன் முதல் முறையாக சிறுவர்களுக்கான பைக் ஓட்டும் பயிற்சி பெற்றார்.

ஒரு சில நாட்களிலேயே பைக் ஓட்ட துவங்கிய வோல்டோ தற்போது சீறிப்பாய்ந்து பதக்கங்களை குவித்து வருகிறார். வோல்டோ டெர்ட் பைக் எனப்படும் மண் மற்றும் மேடுகளில் பைக் ஓட்டும் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார்.

மாநில அளவிலான சிறுவர்களுக்கான பைக் பந்தயத்தில் பல்வேறு பதக்கங்களையும் கோப்பை களையும் குவித்த வோல்டோ எம்.ஆர்.எஃப் நிறுவனம் நடத்திய சிறுவர்களுக்கான பைக் பந்தயத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்.
மண் மற்றும் மேடுகளில் அச்சமின்றி சீறிப்பாயும் வோல்டோ தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்றும், சிறந்த பந்தய வீரராக வேண்டும் என்றும் இலக்குகளை நிர்ணயித்து பயணித்து வருகிறார்.

படிக்க வேண்டும்

spot_img