கோவை மண்டலத் தின் கட்டுமான தொழி லின் நலனுக்காக பல் வேறு திட்டங்களை செயல்படுத்தவும், தொழில் நுட்ப வல்லுநர்கள் இடை யே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் இணைந்து ராம்கோ சிமெண்ட்ஸ் பணியாற்ற உள்ளது.
இது சம்பந்தமாக “சரியான பயன்பாட்டிற் கான சரியான தயாரிப்பு” பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஆக.4) நடந்தது.
இதில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் தலைவர் ஏ. சுதாகர் வரவேற்றார்.
ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தொழில் நுட்ப சேவைகள் பிரி வின் மூத்த பொது மேலாளர் அனில்குமார் பிள்ளை தலைமை தாங்கி பேசினார்.
கார்ப்பரேட் தொடர் பாக இந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த துணை பொதுமேலாளர் சண்முகராஜாஹரி பேசினார்.
தொழில்நுட்ப சேவை கள் பிரிவு துணை மேலாளர் கே.விக்னேஷ்வர் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட், இந்தியா வில் உள்ள முன்னணி தொழில்முறை அமைப் புகளில் ஒன்றாகும். இது கான்கிரீட் தொழிலில் ஈடுபட்டுள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தொழில் சம்பந்தமான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
முக்கிய நகரங்களில் 45 பிராந்திய மையங்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பில் தற்போது 13 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
கடந்த 1961-ம் ஆண்டு சென்னையில் துவங் கப்பட்ட ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் 8 மாநிலங்களில் உள்ள தங்கள் தொழிற்சா லைகள் மூலம் ராம் கோ சூப்பர்கிரீட், ராம் கோ சூப்பர்கிரேட் ஆகிய பிரீமியம் தர சிமெண் ட்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்நிறுவனம் நாட்டின் ஐந்தாவது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறு வனமாகும் என்பது குறிப் பிடத்தக்கது.



