பருத்தி மற்றும் கழிவு பஞ்சு மீதான இறக்குமதி வரியை உடனடியாக நீக்கவும், எம்சிஎக்ஸ், என்சிடிஇஎக்ஸ் போன்ற தளங்களில் சில விவசாய பொருட்களின் வர்த்தகத்தை சமீபத்தில் நீக்கியதுபோல், பருத்தி வர்த்தகத்தை நீக்கி, ஊக வணிகத்தை தவிர்க்க வேண்டும் என்று சைமா தலைவர் ரவிசாம், பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் பல் வேறு உற்பத்தித் துறை களின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தும் வண்ணம் வரிகள், மூலப்பொருட்கள், ஏற்றுமதி பொருட்களுக்கு வெளிநாடுகளில் விதிக்கப்படும் இறக்குமதி வரி போன்ற சிக்கல்களை தீர்க்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜவுளி மதிப்பு சங்கிலி யில் உள்ள ஒட்டு மொத்த ஜவுளிப் பொருட் களையும் ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்தும், பாலியஸ்டர் மூலப் பொருட்கள் மற்றும் பாலியஸ்டர், அக்ரிலிக், விஸ்கோஸ் பஞ்சு மீதும் குவிப்பு வரியை நீக்கியும் அரசு தைரியமான முடிவை எடுத்தது.
ஏற்றுமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகளை திரும்பப் பெறும் வண்ணம் RoDTEP என்ற திட்டத்தை அறிவித்ததன் மூலம் உலகளவில் நமது ஜவுளித் தொழிலின் போட்டித்திறனை அதிகரிக்க உதவியது.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த நிதி நிலை அறிக்கையில், பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத இறக்குமதி வரியை அமலுக்கு கொண்டு வந்தது மட்டுமே ஓர் எதிர்மறை நடவடிக்கையாக அமைந்தது.
இது குறித்து தென்னி ந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவிலேயே விளைவிக்கப்படும் பருத் தியை அதன் சீசனில் (டிச. முதல் மார்ச் வரை) 5 முதல் 10 சதவீதம் மலிவாக கிடைப்பதால், ஜவுளித்துறை உலகளவில் போட்டியிட உதவுகிறது.
ஆனால், தற்போது, சீசன் துவக்கத்தில் இருந்தே பருத்தியின் விலை உயரத் துவங்கி உள்ளது. அக்டோபர் 1-ம் தேதி குவிண்டாலுக்கு ரூ.6788 ஆக இருந்த குஜராத் சங்கர் -6 பருத்தியின் சராசரி விலை, தற்போது ரூ.8930 ஆக உயர்ந்துள்ளது.
நல்ல தரமான சங்கர்-6 பருத்தியின் விலை ரூ.7575-ல் இருந்து ரூ.10,760 ஆக அதிகரித்துள்ளது. பொதுவாகவே இந்திய பருத்தியின் விலையைவிட சர்வதேச பருத்தியின் விலை அதிகமாகவே இருக்கும்.
கடந்த மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பருத்தியின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியின் காரணமாக வரலாற்றில் முதன் முறையாக இந்திய பருத்தியின் விலை சர்வதேச பருத்தியின் விலையைவிட அதிகமாகி, ஏற்றுமதி போட்டித் திறனை வெகுவாக பாதித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக இந்திய பருத்தியின் விலை சர்வதேச பருத்தியின் விலையைவிட கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் 15 வரை அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக டிசம்பர்- ஜனவரி மாதங்களில் உறுதியாகக் கூடிய ஏற்றுமதி ஆர்டர்களை தற்சமயம், இந்திய ஏற்றுமதியாளர்களால் உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.
இதனால், அந்த ஆர்டர்கள் போட்டி நாடுகளுக்குச் சென்ற டைகின்றன. விலை உயரும் என்று கருதுவதால், விவசாயிகள் பருத்தியை சந்தைக்கு கொண்டு வருவதில்லை.
இதனால் தரமான பருத்தி சந்தையில் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தால் கூடுதலாக 5 முதல் 7 சதவீதம் பஞ்சாலைகள் அதிக விலை கொடுக்க வேண்டி உள்ளது.
பருத்தியின் மீதான இறக்குமதி வரியை உடனடியாக நீக்கா விட்டால், பருத்தியைச் சார்ந்த ஒட்டு மொத்த ஜவுளித்துறையின் இயக்கம் வரும் மாதங்களில் நின்று விடும்.
பருத்தி மற்றும் கழிவு பஞ்சு மீதான இறக்குமதி வரியை உடனடியாக நீக்கவும், எம்சிஎக்ஸ், என்சிடிஇஎக்ஸ் போன்ற தளங்களில் சில விவசாய பொருட்களின் வர்த்தகத்தை சமீபத்தில் நீக்கியது
போல், பருத்தி வர்த்தகத்தை நீக்கி, ஊக வணிகத்தை தவிர்க்க வேண்டும். இதில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.



