fbpx
Homeபிற செய்திகள்ஐசிஐசிஐ புரு ஐபுரடெக்ட் ரிடர்ன் ஆப் பிரிமீயம் புதிய பாலிசி அறிமுகம்

ஐசிஐசிஐ புரு ஐபுரடெக்ட் ரிடர்ன் ஆப் பிரிமீயம் புதிய பாலிசி அறிமுகம்

ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் புதுமையான ஒரு நீண்ட கால காப்பீட்டு திட்டமான ICICI Pru iProtect Return of Premium என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளரை மையமாக கொண்ட, அவர்களின் வாழ்க்கை நிலைமைகளின் அடிப்படையிலான உறுதியான பாதுகாப்பை வழங்குகிறது.

இதில் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை நிலைகளின் அடிப்படையில் வாழ்நாள் முழுவதையும் உள்ளடக்கிய காப்பீட்டின் தேவையை தானாகவே சரி செய்யக் கூடியதாக இந்த பாலிசி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை விநியோக அதிகாரி அமித் பட்லா கூறுகையில், “எங்களது புதுமையான பாதுகாப்பு பாலிசியாக, ICICI Pru iProtect Return of Premium உள்ளது.

நிலையான பிரிமீயம் மற்றும் அனைத்து பிரிமீயங்களிலும் 105% வருமானத்துடன் கூடிய, அது வாழ்க்கையின் அனைத்து நிலைமைகளுக்கும் ஏற்ற பாதுகாப்பை வழங்குகிறது. உயிர் வாழும் போதே கிடைக்கக் கூடிய பலன் தொடர்பான வாடிக்கையாளர் மனதில் எழும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் இந்த பாலிசி பதிலளிக்கும்.

இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் நிதி பாதுகாப்பை பெறும் வகையில் நவீன தொழில்நுட்ப தீர்வுகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் நீண்ட கால சேமிப்பு தேவை மற்றும் பாதுகாப்புக்கு உணர்வுப்பூர்வமாக சேவை அளிக்கும் வகையிலான ஒரு நிலையான நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற எங்களுடைய கொள்கைகளுக்கு உதவுவதாக இது அமைந்துள்ளது” என்றார்.

வாழ்க்கை முறைகள் காரணமாக ஏற்படும் புற்றுநோய், இருதய கோளாறு போன்றவை அதிகரித்து வரும் வேளையில், இது போன்ற சிக்கலான நோய்களுக்கு தேவையான நிதி பலன்களை பெற வேண்டியது மிகவும் முக்கியமானதாகிறது.

ஆகவே, காப்பீட்டுத் துறையிலேயே மிகவும் உச்சபட்ச அளவுகளில் ஒன்றாக, வாடிக்கையாளர்களுக்கு 64 சிக்கலான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை ICICI Pru iProtect Return of Premium வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img