இந்தியாவில் கடந்த பத்து ஆண்டு விற்பனை சாதனையை முறியடித்தது ஸ்கோடா ஆட்டோ. 2018-ல் அறிமுகமான இந்தியா 2.0 முனைவு மூலம் நிறுவனம் தனது சாதனைகளைத் தானே முறியடித்ததுடன், ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
2022 ஜூனில் இந்தியா முழுவதும் பல புதிய இல்லங்களை 6,023 ஸ்கோடா மகிழுந்துகள் அலங்கரித்துள்ளன. 2022 மார்ச்சில் 5,608 அலகுகள் விற்பனை மூலம் தனது பத்தாண்டு சாதனையை முறியடித்தது ஸ்கோடா.
கடந்த 2021 ஜூன் விற்பனையான 734 மகிழுந்துகளுடன் ஒப்பிடும் போது தற்போது 2022 ஜூனில் விற்பனை 721% அதிகரித்துள்ளது. மேலும் ஸ்கோடா ஆட்டோ 2021 வருடம் முழுவதும் விற்ற 23,858 மகிழுந்துகள் விற்பனையை, நடப்பு 2022 முதல் அரையாண்டிலேயே 28,899 விற்பனையுடன் கடந்து சாதனை படைத்துள்ளது.
இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் கூறுகையில் ‘மிகச் சவாலான சூழல் நிலவியபோது எங்களது இரு இந்தியா 2.0 பொருள்களும் சந்தையில் களமிறங்கின.
உலகளாவிய கொள்ளை நோய், அடிக்கடி நிகழும் பொது முடக்கம், பொருளாதார இறக்கம், புவிசார் அரசியலின் உறுதியற்ற தன்மை மற்றும் தற்போது நிலவும் தொடர் செமி கண்டக்டர் தட்டுப்பாடு ஆகியவை காரணமாக வழங்கு சங்கிலித் தொடர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.
இச்சூழலில் ஸ்கோடா இந்தியா தொடர்ந்து முந்தைய சாதனைகளை முறியடித்துப் புதிய சாதனைகளைப் படைத்து வருவது ஈடு இணையற்ற செயலாகும். இது எங்கள் குழுக்களின் முழுமையான பணியின் காரணமாகவே கிடைத்த வெற்றியாகும்.
பொருள், வாடிக்கையாளர் திருப்தி, புதிய வாடிக்கையாளர் டச்-பாயிண்ட்களில் ஊடுருவல், வாடிக்கையாளர்களை மையப்படுத்தும் பழுது நீக்கும் பிரச்சாரங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய சாதனை யாகும்.
எங்கள் முகவர் கூட்டாளிகளின் மகத்தான பங்களிப்பு சாதனைக்கு மேலும் மெருகூட்டியது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து 2022-ம் ஆண்டை இந்தியா வின் மிகப் பெரிய வருடமாக உருவாவதை உறுதிப் படுத்துவோம்’ என்றார்.



