ஈரோட்டில் பணி நிறைவு பெற்ற 4 பணியாளர்களுக்கு நிதி வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் மரு.சு.செந்தமிழ்செல்வி தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
கோலக்காரனூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம், புதுரோடு அண்ணாநகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம், ஈரோடு கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த மூன்று பணியாளர்களுக்கு குடும்ப நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சத்திற்கான காசோலைகள், ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற 4 பணியாளர்களுக்கு ரூ.72.59 லட்சமும் ஆக மொத்தம் ரூ.81.59 லட்சத்திற்கான காசோலைகளை வங்கியின் தலைவர் என்.கிருஷ்ணராஜ் வழங்கினார்.
ஈரோடு சரகத் துணைப்பதிவாளர் கு.நர்மதா, வங்கியின் இயக்குநர்கள் இரா.மனோகரன், வி.எம்.லோகநாதன், பி.ராமன், கூட்டுறவு சார்பதிவாளர் எம்.தர்மராஜ், வங்கி உதவிப்பொது மேலாளர்கள் எஸ்.சந்திரமோகன், எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் இருந்தனர்.



